சாமியே சரணம் ஐயப்பா.. மாதம் பிறந்தது.. பக்தர்கள் விரதம் தொடங்கியது…

Default Image

கார்த்திகை 1ஆம் தேதியான இன்று முதல் தமிழகமெங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர்.

மகரவிளக்கு தரிசன பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

குற்றாலத்தில் கனமழை காரணமாக குளிக்க தடை என்றாலும், குற்றாலநாதர் கோவிலில் மாலை அணிய வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கபடுகின்றனர்.

சென்னையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக குளிர்சாதன மற்றும் குளிர்சாதனம் இல்லாத பேருந்துகள் இன்று மாலை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இயக்கப்படுகிறது. இதற்கு நேரடியாகவோ, தமிழ்நாடு SETC போக்குவரத்து கழக இணையதள பக்கத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்க பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்