#Breaking#பிரேதப்பரிசோதனை அறிக்கை தாக்கல்!
சாத்தான்குளம் தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இம்மரணம் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தந்தை – மகன் பிரேதப்பரிசோதனை அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.