கொன்றுள்ளீர்கள்! வழக்கில் திருப்பம்! மரணமா?? கொலையா??-கோட் குட்டு

Published by
kavitha

வியாபாரிகளான சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக  சி.பி.சி.ஐ.டி பதிவு செய்துள்ளது.காவலர் ஆய்வாளர் ரகுகணேசையும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் மரக்கடை ஒன்றை நடத்திய ஜெயராஜ் 60 இவருடைய மகன்   பென்னிக்ஸ் 31செல்போன் கடை  ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல் காலத்தில் நீண்டநேரமாக கடையை திறந்து வைத்திருந்ததாக கடந்த ஜூன் 19ந்தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அவர்களை இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கியதாகவும்  பின் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்ததாகவும் இதை அடுத்து தந்தை, மகன் இறந்தனர். இந்நிலையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது மட்டுமின்றி இச்சம்பவம்  தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகிறார்.

விசாரணை நடத்திய நீதிநடுவரை வசைப்பாடியதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சம்பவத்தன்று அங்கு பணியாற்றிய அனைத்து போலீசாரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இம்மரணம் தொடர்பான வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைத்தது.சி.பி.ஐ., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வழக்கை நடத்துவதற்கு சில தினங்கள் ஆகும் என்ற நிலையில்  சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரனை நடத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதனால் வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு நெல்லை  மாவட்ட  டி.எஸ்.பி., அனில்குமார், நெல்லை டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து இவ்வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் பெற்றார். இந்நிலையில் துாத்துக்குடிக்கு சென்று வழக்கு தொடர்பாக விசாரணையை துவக்கினார். நேற்று சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர், எஸ்.பி., விஜயகுமார் துாத்துக்குடி வந்தனர். இவர்கள் சிறிதுநேர ஆலோசனைக்குப் பின்னர் சாத்தான்குளம் விரைந்தனர்.

சாத்தான்குளத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,க்கள் அனில்குமார், முரளிதரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், சரவணகுமார் ஆகிய  இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 குழுக்களாக  வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.

காவல் ஆய்வாளர் உலகராணி தலைமையிலான குழு,உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை டாக்டர் வினிலா உள்ளிட்டோர், ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணனிடம் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற காவலர், கோவில்பட்டி கிளைச்சிறை வார்டன்கள், சிறையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர் வெங்கடேஷ், கோவில்பட்டி மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை அளித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன், ஊழியர்கள், பிரேதபரிசோதனையின் அடிப்படையில் மருத்துவர்கல் என இச்சம்பவம் நடந்த இடங்களில் தொடர்புடையவர்களை எல்லாம் தனித்தனி குழுவினர்  விசாரணை நடத்தியது.

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமரா காட்சிகள், வீடுகள், கடைத்தெருக்களில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகள் என தடயங்களை சேகரிக்கும் பணியிலும் ஒரு குழு ஈடுபட்டள்ளதாகவும் இருவர் இறப்பு குறித்து விசாரித்து வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், நேற்று திருச்செந்துார் அரசு விடுதியில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலா, சாத்தன் குளம் காவல் நிலையம்  எழுத்தர் பியூலா செல்வகுமாரியிடம் விசாரணை மேற்கொண்டார்.

துாத்துக்குடி எஸ்.பி., அருண் பாலகோபலன் காத்திருப்போர்   பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.,யாக ஜெயக்குமார் நேற்று பொறுப்பேற்றார். அனில்குமார் 1996ல் துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலயத்தில் எஸ்.ஐ.,யாக பணியை தொடங்கியவர். தற்போது சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி.,யாக நெல்லை தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கு மட்டுமின்றி நாகர்கோவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான காசி வழக்கு ஆகிய வழக்கினை விசாரித்த்து வந்தவர்.மேலும் தூத்துக்குடியில் எஸ்.பி.,யாக ஜாங்கிட் பணியாற்றிய போது அனில்குமார் அவரோடு சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. துாத்துக்குடி மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் இருந்து உள்ளார்.

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

12 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

13 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

14 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

14 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

16 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

17 hours ago