சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஐஜி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக கைது சிபிசிஐடி போலீசார் கைது செய்தது.கங்கைகொண்டான் செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் 5 ஆவது குற்றவாளியாகவும் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை முடிந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை, தடயங்களை அழித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,முத்துராஜ்,முருகன் என உள்ளிட்ட 4 காவல் ஆய்வளார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது குறித்து தகவல் தெரிவித்துள்ள சிபிசிஐடி ஐஜி சங்கர் இவ்வழக்கு தொடர்பான அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும்; எங்கள் மீது நம்பிக்கை வைத்த அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு நன்றி, விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில் ரகுகணேஷ் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர் இவ்வழக்கு தொடர்பாக இன்று சிலர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…