சாத்தன் குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து சிபிஐயை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் இறங்கிய சிபிஐ போலீசார் இரு பிரிவுகளாக விசாரணையை முடிக்கிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கனவே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி வழக்கு தொடர்பாக உண்மையை அறிய தங்களது பாணியில் சிபிஐ வியூகம் வகுத்துள்ளதாகவும் அதன் முதல்கட்டமாக காவலர் முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மற்றவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவலர் முத்துராஜிடம் நள்ளிரவு 3 மணி வரை விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியதாகவும்; காலை முதல் மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விசாரணையில் சிபிஐ காவலர் முத்துராஜை ஒரு அறையிலும், மற்றவர்களை வேறொரு அறையில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நேற்று முத்துராஜை சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் காவலர் முத்துராஜிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று காலை முதல் கைதாகிய மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…