சி.பி.ஐ அதிகாரிகள் தமிழகம் வந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் காவலர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவானதை அடுத்து தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டார்.பின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே தனது சொந்த ஊரானள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட முத்துராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலர் முத்துராஜை ஜூன் 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் வந்த சி.பி.ஐ அதிகாரிகள் தங்கி உள்ள நெல்லை விருந்தினர் மாளிகைக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் வருகை தந்தாக தகவல் வெளியாகியுள்ளது.அவ்வாறு சாத்தான்குளம் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை மூடி சீல் வைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் கொண்டு வந்ததாகவும் அவற்றை விசாரணையில் துவங்க உள்ள சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…