சாலை விபத்தில் உயிரிழந்தோர் தினம் இன்று அனுசரிப்பு…!!!
சாலை விபத்தில் இறந்தோர் தினம் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கான உலக நினைவேந்தல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் பயணியர், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.