காலம், எந்த அதிகாரத்தின் கையில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ? அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், ஆதரவு குரல் கொடுப்போருக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சில பிரபாலங்கள் கருது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சு.வெங்கடேசன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘விவசாயிகளின்போராட்டம் குறித்து வாய் திறக்காமல் அதிகாரத்திற்கு அடிபணிந்து, இறையாண்மை, உள்நாட்டு விவகாரம் என்றெல்லாம் பிதற்றும் பிரபலங்களுக்கு சொல்லிக் கொள்வது, காலம், எந்த அதிகாரத்தின் கையில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ? அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…