S.V.சேகர் சர்ச்சை பேச்சு.! மன்னிப்பு கேட்டால் சரியாகாது.! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்.!
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சையாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய S.V.சேகர் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு திரைப்பட நடிகரும், முன்னாள் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார் என தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணையின் போது, பாதிப்பு ஏற்படுத்திவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டால் அது சரியாகிவிடாது.