தமிழக பாஜக கட்சியை சேர்ந்த சேர்ந்தவரும் திரைப்படப் பிரபலமான எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ‘ தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுகவினர் தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சட்டமானது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எனவும், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதற்கு தமிழகஅரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும்,
பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து தமிழக பாஜகவினர் தமிழகத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டனர் எனவும், தான் தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். தமிழக பாஜக தலைவர் பட்டியல் பெயரில் தனது பெயரும் உள்ளது.’ எனவும் பல அதிரடியான கருத்துகளை நேற்று தெரிவித்தார்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…