கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு நீட்டிக்க முடிவு

கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீடிக்க தமிழக அரசு முடிவு.
தமிழகத்தில் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அவர்களுக்கு அரசாங்கம் ஊக்கத்தொகை அளித்து வருகிறது. இந்த ஊக்கத் தொகையானது 3ம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தற்போது இந்த திட்டத்தை 10-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக மாணவியர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.