கிராமப்புற வளர்ச்சி மிக முக்கியம்.! அதில் சிறப்பு கவனம் தேவை.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!
மாநில வாளர்ச்சியில் முக்கியம் கிராமப்புற வளர்ச்சி ஆகும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார குறியீடு மட்டும் இல்லை. மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியது. என்பது மட்டுமே நமது நோக்கம் ஆகும்.
மாநில வாளர்ச்சியில் முக்கியம் கிராமப்புற வளர்ச்சி ஆகும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம் நடத்தப்படுகிறது.
கடந்த மே 18 அன்று முதல் கூட்டம் நடைபெற்றது. இன்று 2வது கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 5 கோடி நிதி கிடைக்கும். அதனை வைத்து பல்வேறு பணிகள் ஊரக புறங்களில் நடைபெறுகிறது. 2019 – 2020ஆம் ஆண்டுகளில் 3471 பணிகள் திட்டமிடப்பட்டு 3043 பணிகள் நிறைவு பெற்றது. அதில் 428 பணிகள் முன்னேற்றத்தில் இருக்கின்றன.
அதே போல, 2020-2021 காலகட்டத்தில் 1015 பணிகள் திட்டமிடப்பட்டு 517 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. அடுத்து அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும். அதற்காக, கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த படுகிறது.ஸ்
தமிழகத்தில் 54,431 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் சுமார் 27 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். அதே போல, 7 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் பயன்பெறுகின்றனர். கடந்த நவம்பர் 2ஆம் முதல் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் விலையில்லா அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் முன்னோடி கிராம திட்டம் மூலம் 50 விழுக்காடுக்கு அதிகமாக பழங்குடியினர் இருக்கும் கிராமங்கள் தேர்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் வருவதற்கு 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1,357 வருவாய் கிராமங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு குடியிருப்பு ஒவ்வொரு திட்டமம் திட்டங்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். என அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.