வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி – பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வருகை..!
தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வருகை
நேற்று, திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது.
இதனால் வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை தொடர்பில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 3 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து, பீகார் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு, தமிழக அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தொழிலாளர் நல அமைச்சர் கணேசன் கலந்து கொள்கின்றனர்.