ரயில்கள் விழுப்புரம் மட்டும் இயக்கப்படுவதாக பரவும் வதந்திகள்! தெற்கு ரயில்வே விளக்கம்!
ரயில்கள் விழுப்புரம் மட்டும் இயக்கப்படுவதாக பரவும் வதந்திகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாத காலமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேருந்துகள் மற்றும் ரயில்கள் நிபந்தனைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு காரணமாக தென்பகுதியில் இருந்து வரும் ரயில்கள் விழுப்புரம் மட்டும் இயக்கப்படுவதாக சில வதந்திகள் வாட்சப்பில் வலம் வந்த நிலையில், இது உண்மை அல்ல என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள் திட்டமிட்டபடி இரு மார்க்கத்திலும் செங்கல்பட்டிலிருந்து இயங்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.