வதந்தி வீடியோ விவகாரத்தில் டெல்லி பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் கிளை மறுப்பு.
பொய்யான வதந்திகள்:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகளை சிலர் பரப்பியதால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பொய்யான வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கைது நடவடிக்கையில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
ஜாமீன் கோரி மனு:
அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமாண்ட்ரம், இந்த முன்ஜாமீன் மனுவை தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனு வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் வழங்க மறுப்பு:
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
நீதிபதி கண்டனம்:
தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…