வதந்திகளால் சிக்கன் விற்பனை கடும் விழ்ச்சி : ரூ.40க்கு ஒரு கிலோ சிக்கன் விற்பனை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் மற்றும் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு வதந்தியே காரணம் என கடைக்காரர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.40 ஆக குறைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். கேரளா பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா எதிரொலியால் கடும் வீச்சியடைந்துள்ளது. பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1 கிலோ ரூ.40, 2 கிலோ ரூ.70, 3 கிலோ ரூ.99 மற்றும் 100 கிராம் சில்லி சிக்கன் ரூ.15 மட்டுமே என்ற அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறோம். இதனால் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது என்று நாமக்கல் கோழிக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர். இதனிடையே கோழிகளுக்கு கொரோனா தொற்று என தவறான கருத்துகளை பரப்பிய 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025