பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தொல்லியல் அறிஞர்கள், இது டைனோசர் முட்டைகள் இல்லை.
பொதுவாக ஒரு சிறுபொருள் இருந்தால், அதானைச்சுற்றி தாதுப்பொருட்கள் சேர்ந்து உருண்டையாக அல்லது முட்டைவடிவங்களில் காட்சியளிக்கும். இது தான் இந்த முட்டை போன்ற பொருட்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக இணையத்தில் வித்தியாசமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றனர். அந்த மீம்ஸ்களில், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் டைனோசர் வாழ்வது போல நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025