6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி – கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி, அடித்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சியில் தமிழக ராசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அடுத்த கல்வியாண்டு முதல் இப்பாடப்பகுதி நீக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.