திமுகவை விட இந்த நிகழ்ச்சியை ஆளும் கட்சியினர் தான் அதிகம் பார்ப்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று 3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவர் செவித்திறன் இழந்த தனது மகளுக்கு கல்விக்காக சில கருவிகள் வாங்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியை ஆளும் கட்சியினர் கண்டிப்பாக பார்ப்பார்கள்.நம்மளை விட இந்த நிகழ்ச்சியை அவர்கள் தான் அதிகம் பார்ப்பார்கள்.ஏனென்றால் ஆரணியில் இப்படித்தான் நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் ஒருவர் பேசுகையில்,வீடு எரிந்துவிட்டது.பயிர் எல்லாம் அழுகி விட்டது என்று கூறினார்கள்.2 மாதங்கள் ஆகியும் நிவாரணம் எதுவும் வழங்கவில்லை என்று கூறினார்.இதற்கு கவலைப்படாதீர்கள்.நாளைக்கு நான் ஏற்பாடு செய்வதாக கூறினேன்.உடனே அரசு இரவே நிவாரண நிதி அளித்துவிட்டது.இந்த நிகழ்ச்சியை ஆளுங்கட்சியினர் கண்டிப்பாக பார்ப்பார்கள்.ஒருவேளை பார்த்தும் இரக்கம் வரவில்லை என்றால் 3 மாதம் பொறுத்திருங்கள்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயம் அந்த உதவி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…