மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு யார் என கருத்துக் கணிப்பில் வெளியிட்ட தினகரன் அலுவலகத்தின் மீது 2007 ஆம் ஆண்டு தாக்குதல் நடந்தது. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் தினகரன் அலுவலகத்தில் பணிபுரிந்த முத்துராமலிங்கம், கோபிநாத்,வினோத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 12 வருடம் கழித்து இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.
பல்வேறு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஊழியர்கள் 3 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலின்போது மதுரை மாவட்ட ஏடிஎஸ்பி ஆக இருந்த ராஜாராம் தாக்குதலை பெரிதாக கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் கண் முன்னரே பல பயங்கரம் நடந்தது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அப்போதைய ஏடிஎஸ்பி தற்போது ஓய்வுபெற்றுள்ள ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…