ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்.
ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர வேறு எதுவும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார்.
எதற்காக தங்களது பேரணியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை என ஆர்எஸ்எஸ் கூறியதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பொதுபாதுகாப்புக்கு பாதிப்பு எனில் அரசு உரிய கட்டுப்பாடு விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாதுக்காப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்த முதலில் அனுமதி தர முடியும். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை, நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் இடங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றுள்ளது.
உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உளவுத்துறை அறிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எனவும் அரசு குற்றசாட்டியுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தற்போது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…