ஆர்.எஸ்.எஸ். பேரணியை எதிர்ப்பது ஏன்? தமிழக அரசு விளக்கம்!

Default Image

ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்.

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர வேறு எதுவும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார்.

எதற்காக தங்களது பேரணியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை என ஆர்எஸ்எஸ் கூறியதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  பொதுபாதுகாப்புக்கு பாதிப்பு எனில் அரசு உரிய கட்டுப்பாடு விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாதுக்காப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்த முதலில் அனுமதி தர முடியும். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை, நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் இடங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றுள்ளது.

உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உளவுத்துறை அறிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எனவும் அரசு குற்றசாட்டியுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தற்போது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்