ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
தமிழகத்தில் கடந்த காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பேரணி நடத்த அனுமதி
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடுமையான ஒழுங்குகளுடன் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் ஆணையிடப்பட்டது. மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டிஜிபிக்கு நோட்டிஸ்
பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நேற்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மார்ச் 5-ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நேற்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம்…
ஆந்திரா : பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்றபடி கடைசி வரை பொறுமையாக களத்திற்குள் நின்று சேவல் ஒன்று…