RSS பேரணி ஒத்திவைப்பு – மேல்முறையீடு செய்ய திட்டம்!
உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டம்.
தமிழ்நாடு முழுவதும் நாளை நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. உயர்நீதிமன்றம் விதித்த 11 நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.