3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

RSS Rally - Madurai High court

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, RSS அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடத்தி,  இறுதியில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது.

தற்போது அதே போல தென் மாவட்டங்களில் 20 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை பதில் அளிக்காத காரணத்தால் RSS அமைப்பு இந்த முறை மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது.

அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் – அமைச்சர் சேகர் பாபு

தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அச்சமயம் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் பேரணி நடத்தும் போது உரிய பாதுக்காப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என தமிழக காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

அதே போல, RSS பேரணி மாவட்ட தலைநகரங்களில் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும், யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்ற முழு விவரத்தையும் பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் RSS அமைப்புக்கு உத்தரவிட்டது.

இதனை அடுத்து நேற்று வழக்கு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல, தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் RSS பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பிற தென் மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ளலாம் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்