அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர்.
அதனை ஏற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, பிரித்தாளும் கொள்கையை கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொள்கை.
ஆதலால், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…