இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் , அதன் தோற்றுவிக்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய 2 ஞாயிற்று கிழமைகளில் தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரினர்.
குறிப்பிட்ட 14 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த ,மாவட்ட காவல் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் , அனுமதி தர தாமதமானதால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது.
RSS பேரணியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
தென் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்த்துறை அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஆர்எஸ்எஸ் பேரணி ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும், யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற முழு விவரத்தையும் பிராமண பத்திரமாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இன்றும் ஆஎஸ்எஸ் பேரணி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணை முடிவில் நாளை இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…