ஆர்எஸ்எஸ் மத கலவரத்தை உண்டாக்கக் கூடியது – சிபிஎம் மூத்த தலைவர்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என சிபிஎம் மூத்த தலைவர் கோரிக்கை.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இதுதொடர்பாக பேசிய சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், உலக நாடுகள் அனைத்தும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்து உள்ளதாக தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். அது உண்மை அல்ல. ஐநா அமைப்பு அங்கீகரித்துள்ள 195 நாடுகளில் 30 நாடுகள் மட்டுமே மதம் சார்ந்துள்ள அரசு என கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ் மத கலவரத்தை உண்டாக்கக்கூடியது. அந்த அமைப்பின் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.