அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து விஜய் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் ஹேமலா- துரைசாமி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சுப்ரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு ஹேமலா- துரைசாமி அமர்வு இடைக்கால தடை விதித்தது
இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரூ 1 லட்சத்தை கொரோனா நிதிக்கு ஏன் கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
அப்போது, கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் ரூ.25 லட்சம் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், சொகுசு கார் வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுப்ரமணியம் முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…