ஆர் எஸ் பாரதி என்னமோ விஞ்ஞானி போல புகார் கொடுத்திருக்கிறார்- முதல்வர்.!

Default Image

ஆர் எஸ் பாரதி என்னமோ விஞ்ஞானி போன்று என் மீது ஒரு புகாரை கொடுத்திருக்கிறார் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் சென்ற முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணை நீர் திறப்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் அம்மாவட்ட ஆட்சியர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ஆர் எஸ் பாரதி என்னமோ விஞ்ஞானி போன்று என் மீது ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். பத்திரிகை விளம்பரத்துக்காக புகார்களை கொடுக்கிறார். அவர், தரும் புகார்களின் உண்மை தன்மையை ஊடங்கங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி  தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யபட்டார். அப்போது பேட்டியளித்த ஆர்.எஸ் பாரதி, பிப்ரவரி 15-ம் தேதி அன்பகம் அரங்கத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசிய செய்திகள் வெளியான நிலையில்  மறுநாளே அதற்கு மன்னிப்பும், வருத்தம் தெரிவித்துவிட்டு விட்டேன். இது முடிந்து 100 நாளாகி விட்டது.

இப்போது சென்னையில் கொரனோ உச்சக்கட்டத்தில் உள்ளது. 8,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதைக் கவனிக்காமல் என்னை கைது செய்து சிறையில் அடைக்க அதிமுக அரசு முடிவு செய்திருக்கிறது. நான் ஜெயிலுக்கு செல்ல பயந்தவன் அல்ல, கலைஞருடன் பலமுறை சிறையில் இருந்து இருக்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று ஒரு புகார் கொடுத்து இருக்கிறேன். அதனால், கோபம் கொண்டு இன்று அதிகாலை கைது செய்கிறார்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்