பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம். 

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்? என்று காட்டமான கேள்வியுடன் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக கூறுகிறார் அண்ணாமலை.

முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!

ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…

29 minutes ago

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

13 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

15 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

15 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

17 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

18 hours ago