ஆர்.எஸ்.பாரதி கைது..! வைகோ கண்டனம்.!
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு சற்று நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கவுள்ளனர். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வைகோ வெளிட்ட அறிக்கையில், கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அ.தி.மு.க. அரசு, தற்போது ஆலந்தூர் பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் ஆயிரம் பிரச்னைகள் உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது
– வைகோ pic.twitter.com/D8DbDOpC9m
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 23, 2020