போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு.!
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்கள் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன்மூலம் பணபலன்கள் பெற முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.