பாதிப்பை ஈடுசெய்ய ரூ.9,000 கோடி தேவை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. மக்களை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற யாரும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதிப்பை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி தேவை என பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். சவாலான இந்த தருணத்தில் நாட்டின் நலன் கருதி தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே ரூ.4,000 கோடி நிதி வழங்குமாறு கோரியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகளை ஈடுசெய்ய தமிழகத்திற்கு ரூ.9000 கோடி கோரி, மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். #Corona #TamilNadulockdown #TNGovt pic.twitter.com/U4CMcUej41
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 28, 2020