தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை எடுத்து, பப்ஜி விளையாட்டிற்காக செலவிட்ட மகன்கள்.
சென்னை தேனாம்பேட்டையில், மளிகை கடை நடத்தி வருபவர் நடராஜன். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த மொபைல் போனில், தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை VPN மூலமாக விளையாடி வந்தனர்.
இந்நிலையில்,நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.8 லட்சம் திடீரென காணாமல் போயுள்ளது. கொள்ளைபோயிருக்க வாய்ப்பில்லை என அறிந்த அவர், மனைவி மற்றும் மகன்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, பணத்தை எடுத்ததை சிறுவர்கள் ஒப்புக் கொண்டனர். பின் மகன்களிடம் பணத்தை என்ன செய்தீர்கள் என நடராஜன் விசாரித்துள்ளார்.
அப்போது பப்ஜி கேமை விளையாடி வந்த அவர்களிடம், அதிக லெவலை முடித்த ஐ.டி-யை காட்டி, அந்த ஐ.டி-யை தனது பெற்றோர் மூலம் வாங்கி தருவதாக மற்றோரு சிறுவன் கூறியதும் தெரியவந்துள்ளது. இந்த ஐ.டி-யை பெறுவதற்காக தந்தை சேமித்து வைத்திருந்த பணத்தை, நடராஜனின் மகன்கள் இருவரும், ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக எடுத்து நண்பனிடம் கொடுத்தாததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களின் நண்பனை பிடித்து விசாரித்த போது, அந்த பணத்தை தனது பெற்றோர்களான ராஜசேகர் – மெரிடாவிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த நடராஜன் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ராஜசேகர் – மெரிடா ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…