கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மதுரை தனியார் மருவமனைக்கு சென்ற நேரு என்பவரிடம் ரூ.8 லட்சம் வசூல்.

மதுரையில் கொரோனா சிகிச்சைக்காக முன்பணமாக பெற்ற ரூ.8 லட்சத்தை திருப்பி தரகோருவது பற்றி பதில்தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், மதுரை ஆட்சியர், மருத்துவர் ராஜ்குமார் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, அறிகுறி இருப்பதாக கூறி, மதுரை தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை முன்பணமாக ரூ.8 லட்சம் பெற்றுள்ளது.

இதையடுத்து, பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் மனுதாரரான நேரு, அவரது மனைவி வீடு திரும்பியுள்ளனர். பின்னர் 2 நாள் சிகிச்சைக்கான செலவு போக மீதப்பணத்தை திருப்பி கேட்டபோது மருத்துவமனை தர மறுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரூ.1.05 லட்சத்தை திருப்பி தந்த நிலையில், ரூ.65.840 க்கு மட்டுமே மருத்துவமனை ரசீது தந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்