#BreakingNews : தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் பழனிசாமி
அரியலூர் மாவட்டத்தில் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாதம் நடைபெற உள்ள ம் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.வருகின்ற 13-ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே , அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் இறந்த மாணவர் விக்னேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்தினருக்கு, ரூ.7 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.#EdappadiPalaniswami | #neetexam pic.twitter.com/xl4yFpN9uR
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 10, 2020