நடப்பாண்டில் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1967 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் சரோஜா

Default Image

பேரவையில் அமைச்சர் சரோஜா புதிய  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,இறப்பின் விளிம்பில் இருந்து 1,062 ஆண் குழந்தைகள், 4,177 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் . முதியோர்களின் உணவு மானியம் ரூ.300-லிருந்து, ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பாண்டில் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

மனநலம் பாதிக்கப்பட்ட 1,100 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் துவங்கப்படும்.திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கென ரூ.1 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்பு பள்ளி விடுதிகளுக்கு, ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்