10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் -அமைச்சர் வேலுமணி
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.சட்டப்பேரவையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.அதில், தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது.
தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார்.ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.