கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக இருந்த நிலையில், தற்போது 1,204 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி, காவல்-தீயணைப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.