கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு தரப்பில் வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 அறிவிக்கப்பட்டது.
அந்த வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நிவாரணத் தொகை அதிகரித்து வங்கி கணக்கில் செலுத்த கோரி சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்காபுர்வாலா , நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சார்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இதுவரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத்தொகை கோரும் 7.30 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோருக்கு டெபாசிட் செய்யப்படும். மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், வங்கி கணக்கு விவரம் பெற தாமதமாகும் என்பதாலும் ரொக்கமாக தரப்பட்டது.
சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…