ரொக்கமாக ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கியது ஏன்..? அரசு விளக்கம்..!

டந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு தரப்பில் வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 அறிவிக்கப்பட்டது.

அந்த வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நிவாரணத் தொகை அதிகரித்து வங்கி கணக்கில் செலுத்த கோரி சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்காபுர்வாலா , நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சார்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இதுவரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  நிவாரணத்தொகை கோரும் 7.30 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோருக்கு டெபாசிட் செய்யப்படும். மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், வங்கி கணக்கு விவரம் பெற தாமதமாகும் என்பதாலும் ரொக்கமாக தரப்பட்டது.

சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்