ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும் என்றால் ரூ 5,000, ரூ 10,000 அல்ல ரூ5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்-கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
அனைவரும் வாக்களியுங்கள், வாக்குகளை நோட்டாவிற்கு போடாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ஓட்டுக்காக வழங்கப்படும் பணத்தை வாங்கினால் கேள்வி கேட்க முடியாது. ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும் என்றால் ரூ 5,000, ரூ 10,000 அல்ல ரூ5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.ஏனென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5 லட்ச ரூபாய் அளவிற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.அதனை கேட்டு பெறுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.