சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிப்பு
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம், 25,009 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,600-ல் இருந்து ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…