தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை

குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்குவது வழக்கம்.இந்த நிதிகள் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் ஆகிய வற்றை தூர்வாறி அகலப்படுத்துவதற்காகவும், ஆழப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,1387 குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடியும்,திருச்சி மண்டலத்தில் 458 பணிகளுக்கு ரூ.140 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ. 156 கோடி மதிப்பில் 306 பணிகள் மேற்கொள்ளவும், கோவை மண்டலத்தில் ரூ. 45 கோடி செலவில் 246 பணிகள் மேற்கொள்ளவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.