கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாராக பணியாற்றி வந்தவர், வேல்முருகன். 40 வயதாகும் இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டே வந்தநிலையில், இன்று அதிகாலை வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார் . மேலும் கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஊடக நண்பர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது பாதுகாப்பாக செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025