கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டு நிலையில் அவருடைய வருங்காலத்திற்காக பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் என்பது வழங்கப்படும் என்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூபாய் 3000 உதவித் தொகையை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.
ஏற்கனவே தாய் தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்று நோயால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…