வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
அதேபோல் வ.உ.சிதம்பரனார் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் என்றும் சிதம்பரனார் எழுதிய அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில், மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
வ.உ.சி தொடர்பாக, மாணவர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுளார்.
மேலும், தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் நெல்லையில் ம.சு.பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆய்வறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், கோவை வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…