150-க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி பண மோசடி..!-3 பேர் கைது..!

Default Image

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடி ரூபாய் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனந்தி என்பவர் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர். இவர் வயது 35. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு துறையான அச்சுத்துறை, எழுதுபொருள் துறை மற்றும் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளுக்காக 85 பேரிடம் ரூ.4 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளதாக ரேஷ்மா தாவூத், நந்தினி மற்றும் இவரது கணவன் அருண் சாய்ஜி ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இதில் கைதாகியுள்ள ரேஸ்மா தாவூத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில செயலாளராக பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

அதில் வேலை தேடும் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இதுவரை ரூ.5 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், போலி பணி நியமன ஆணை அச்சடித்து மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் போலி ஆவணங்களையும், அச்சு இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றினர். 3 நாள் காவலுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்