கஜா புயல் பாதிப்பு…!4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு …! எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டார்.அதன் பின் அவர் கூறுவகையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது.படிப்பு முடியும் வரை அவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இதனால் 650 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.